Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 03 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ, எம்.கிருஸ்ணா
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து, இன்று உயிரிழந்த 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான இராமசாமி காளியம்மாவின் இறுதிக் கிரியைகளுக்காக, நுவரெலியா மாவட்ட அனர்த்த நிவாரண நிலையம் நிதியுதவி வழங்கியுள்ளது.
இதற்கமைய, 25,000 ரூபாய் பணம், உயிரிழந்த பெண்ணின் கணவனிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத் மற்றும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் ஆகியயோர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் குடும்பத்தாரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கையளித்துள்ளனர்.
முதற்கட்டமாக உயிரிழந்த தாயின் இறுதி கிரியைகளுக்காக. 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் இறப்புச் சான்றிதழ் வழங்கிய பின்னர் 75,000 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குறித்த வீட்டின் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்று, அதற்கான இழப்பீடை வழங்கவும் நடவடிக்கை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago