R.Maheshwary / 2022 ஜூன் 08 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா பிரதேச சபையின் மீப்பிளிமான வட்டாரத்திற்குரிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அஜித் உயன்கொடவுக்கு எதிர்வரும் மூன்று மாதங்கள் சபை அமர்வில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தவிசாளர் வேலு யோகராஜ் இந்த உத்தரவை சபையில் அறிவித்துள்ளார்.
நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் நேற்று (07) காலை நடைபெற்றதுடன், இதன்போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த உறுப்பினர், நுவரெலியா பிரதேச சபைக்கு தற்போது சொந்தம் அல்லாத கந்தப்பளை நகரில் உள்ள காணி ஒன்று தொடர்பில் தவறான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தும்,செய்திகளை பரப்பியும் சபைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர் தொடர்ச்சியாக நுவரெலியா பிரதேச சபைக்கு எதிராகவே தனது செயற்பாட்டை முன்னெடுத்து வந்துள்ளதாகவும் இவர் தொடர்பில் சபை உறுப்பினர்கள் முடிவெடுக்க வேண்டும் எனவும் தவிசாளர் பிரேரணை ஒன்றை முன்வைத்ததுடன், ஏனைய உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago