2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உலருணவுப்பொருட்கள் வழங்கல்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

சர்வதேச சிறுவர், முதியோர் தினத்தையொட்டி, ஹட்டன் ரெயாபோத் பாலர் பாடசாலை மாணவர்களால், முதியோருக்கு உலருணவுப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு, பாலர் பாடசாலையில் இன்று(02) நடைபெற்றது.

வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாழும் முதியோரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உலருணவுப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.

மாணவர்களின் பெற்றோரால் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டே, இவ் உலருணவுப் பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், ரெயாபோத் ஆசிரியர் குழாம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .