Ilango Bharathy / 2021 ஜூன் 17 , பி.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஹப்புத்தளை பிரதேசத்திலுள்ள தமிழ் ஊடகவியலாளர் ஒருவர், அடையாளம் தெரியாத
இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டு தியத்தலாவை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலத்திரனியல் ஊடகவியலாளரான பி.மகேஸ்வரன் என்ற ஊடகவியலாளர் நேற்று முன்தினம்
(16) மாலை ஹப்புத்தளை- பழைய காடு பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற போதே,
தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், பதுளை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம், ஹப்புத்தளை பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி சாகர தயாரட்ணவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர் ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோரைக் கைதுசெய்வதற்கான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
9 minute ago
25 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
3 hours ago
4 hours ago