R.Maheshwary / 2022 மே 10 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நாட்டில் நேற்று பகல் தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாத்திரையை முடித்துக்கொண்டு ஹட்டன் ரயில் நிலையத்துக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே, ஊரடங்கு உத்தரவு குறித்து தாம் அறிந்துக்கொண்டதாக யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனுக்கு வருகைத் தந்த அதிகமான யாத்திரிகர்கள் ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் ஜயசேன தெரிவித்துள்ளார்.
இவர்கள் கொழும்பு, களுத்துறை, காலி, அம்பேபுஸ்ஸ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago