2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஊவாவில் டிப்பர்களால் வாகன விபத்துகள் அதிகரிப்பு

R.Maheshwary   / 2022 மார்ச் 02 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாலித ஆரியவன்ஸ

ஊவா மாகாணத்தில் மணல் ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடும் டிப்பர் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மஹியங்கனை, ரிதியாலியத்த, கிராந்துருகோட்டை, பசறை, ஹாலிஎல, லுணுகல, கந்தகெட்டிய, பதுளை மற்றும் மடுல்சீம ஆகிய பிரதேசங்களில் உள்ள 43 சதவீதமான டிப்பர் வாகனங்கள் பல்வேறு குறைபாடுகளுடன் பயணிப்பதாக  தெரியவந்துள்ளது.

கடந்த 2 நாள்களாக குறித்த பகுதிகளிலுள்ள பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே, இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளது என பதுளை பகுதிக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்ல தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X