Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது வரவு-செலவுத் திட்டம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமென தபால்,தபால்துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கூறினார்.
ஐ.தே.க.வின் ஆட்சியின் கீழ், இம்முறை சமர்பிக்கப்படவுள்ள முதலாவது வரவு-செலவுத் திட்டத்தில் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பல சலுகைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அக்குறணை கசாவத்தையில் செவ்வாய்க்கிழமை (27) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '30 வருட யுத்தத்தம் காரணமாக சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்கும் இக்கட்டான நிலையை நாடு எதிர்நோக்கி இருந்தது. இந்நிலையிலே நாட்டில் நல்லாட்சி மலர்ந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பிரச்சினைகளில் இருந்து நாட்டை காப்பாற்றினர்.
ஐக்கிய தேசியக் கட்சி 20 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்திருப்பதால், மக்கள் எம்மிடமிருந்து பல சேவைகளை எதிர்பார்க்கின்றனர். முக்கியமாக தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றனர். கடந்த பொதுத் தேர்தலின் போது நாங்கள் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ளோம்.
முஸ்லிம் சமய விவகார அமைச்சின் ஊடாக இடம்பெரும் ஹஜ் விவகாரத்தில் கடந்த காலங்களில் பல சிக்கல்கள் எழுந்தன. இம்முறை அதனை முறையாக நிறைவேற்ற முடிந்தது. எதிர்காலத்தில் உலமாக்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோருடன் ஆலோசித்து எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago