2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Kogilavani   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம- தெனிபிடியவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், பாரிய கொள்ளைச் சம்பவமொன்று,  இன்றுக் காலை இடம்பெற்றுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

முகமூடி அணிந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையிலிருந்த ஊழியர்களை துப்பாக்கி முணையில் அச்சுறுத்திவிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனரென, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மாத்தறை மாவட்டம் அகுரஸ்ஸ, கும்புறுப்பிட்டிய ஆகிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்த இரண்டு தினங்களுக்குள் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .