2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நிலையத்தில் அரசியல்வாதி அடாவடி

R.Maheshwary   / 2022 ஜூன் 22 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கண்டி- குருநாகல் வீதியில் அலதெனியா மற்றும் ஹேதெனிய ஆகிய பிரதேசங்களில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் பல நாட்கள் காத்திருந்தாலும் அந்த பிரதேசத்தின் அரசியல்வாதியொவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எத்தனை பேர் வரிசைகளில் காத்திருந்தாலும்  குறித்த அரசியல்வாதியின் பஸ் மற்றும் காருக்கு எவ்வித கட்டுபாடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேச அரசியல்வாதி பல போக்குவரத்து பஸ்களுக்கு சொந்தக்காரர் என்றும் குறித்த பஸ்கள் குருநாகல்- கண்டி, மெதவல- கண்டி, ஹேதெனிய ஆகிய இடங்களில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த அரசியல்வாதியின் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு, தமக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த எரிபொருள் நிரப்ப நிலைய பணியாளர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதற்க எதிராக குரல் வரிசையில் நிற்பவர்கள் எவரேனும் கதைத்தால், அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X