Freelancer / 2023 மார்ச் 01 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித்ராஜபக்ஷ
ஐயர் ஒருவர் தவறவிட்ட 12 ஆயிரத்து 95 ரூபாய் பணத்தையும் ஏனைய ஆவணங்களையும் ஓட்டோ சாரதியொருவர் கண்டெடுத்து ஐயரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மல்வத்த பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாதமலைக்கு வந்த ஐயரே இவ்வாறு பணத்தை தவற விட்டுவிட்டார்.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு பயணித்த ரயிலில் வந்த 23 வயதான அஜித்குமார் என்ற ஐயர், ரயிலில் இருந்து இறங்கி,ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏற முயன்ற போது 28 ஆம் திகதி மாலை 3 மணியளவில் பணத்துடன் பொதியைத் தவறவிட்டுள்ளார்.

அந்தப் பொதியைக் கண்டெடுத்த, வாடகைக்கு ஓட்டோ செலுத்தும் சாரதியான ஹட்டன் ஆரியகமவை வசிப்பிடமாகக் கொண்ட ருக்ஷான் செனவிரத்ன (வயது 46) ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஊடாக உரியவரிடம் கையளித்துள்ளார்.
ஓட்டோ சாரதியினால் கண்டெடுக்கப்பட்ட பொதியில், ஐயரின் அடையாளஅட்டை, வங்கி அட்டைகள் சில இருந்துள்ளன.
15 minute ago
33 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
5 hours ago