Editorial / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
வாழ்க்கைச் செலவு அதிகரித்து சென்று கொண்டே இருப்பதனால், நாளொன்றுக்கு ஒருவேளை உணவை மட்டுமே உட்கொள்கின்றோம். அந்த உணவிலும் போதியளவான போசாக்கு இல்லாமல் இருக்கின்றது என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமையால், இரண்டு வேளைகளை வெறும் வயிற்றுடன் கழிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ள தொழிலாளர்கள், இதனால், பிள்ளைகளும் கடுமையான போசாக்கு பற்றாக்குறைக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றனர்.
கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசியமான உணவுப் பன்டங்களில் விலைகள், விண்ணை எட்டுமளவுக்கு உயர்ந்துவிட்டன. வருமானம் கடுமையாக கீழிறங்கியுள்ளது. கிடைக்கும் வருமானத்தில் பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவை கொடுத்துவிட்டு, பெரும்பாலான நேரங்களில் முழுப்பட்டியாய் கிடப்பதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கும் கிழங்குகளை அவித்து உண்டு பலரும் பசியை போக்கிக் கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ள அம்மக்கள், வாழ்க்கைச் செலவை குறைப்பதற்காக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்குமாறும், வருமானத்தை அதிகரிக் நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
25 minute ago
33 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
44 minute ago