R.Maheshwary / 2022 ஜனவரி 18 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் மூன்று கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய. அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சிலையின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்கு அடுத்துள்ள பச்சைபங்களா தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியலிலுள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு அடுத்த தோட்டமான உருலேக்கர் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலிலும் இவ்வாறே கொள்ளையிட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை நகருக்கு அருகிலுள்ள அடுத்தடுத்த தோட்டங்களில் ஓரே நாளில் இவ்வாறு கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து அக்கரப்பத்தனை பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை பிரிவினரும் சம்பவம் இடம்பெற்ற கோவில்களுக்குச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .