R.Maheshwary / 2022 ஒக்டோபர் 25 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோவிலிருந்து வெளியே வீசப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கொஸ்லாந்தை பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த ஓட்டோவின் சாரதியே வெளியே வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பெரகல- வெல்லவாய வீதியில் நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 56 வயதுடைய நிக்கபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார் என கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஓட்டோவை செலுத்திச் சென்ற போது, தனது மனைவியிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்துக்கொண்டே ஓட்டோவிலிருந்து வெளியே விழுந்துள்ளார்.
இதனையடுத்து ஓட்டோவும் மரம் மற்றும் மின்சார தூண் ஒன்றில் மோதி நின்றுள்ளதுடன், ஓட்டோவில் இருந்து விழுந்த நபர் காயங்களுடன் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026