2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கட்டக்காலி நாய்களால் தொல்லை

R.Maheshwary   / 2022 ஜூன் 14 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

கட்டாக்காலி நாய்களால் ஹட்டன்- டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் உறுப்பினர் அழகமுத்து நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் மருந்து தட்டுபாடு தீவிரமடைந்து காணப்பட்டு வரும் நிலையில், நாய், பூனைகள் கடிப்பதால் ஏற்படும் நீர்வெறுப்பு நோய்க்கான மருந்து எந்தவொரு வைத்தியசாலையிலும் இல்லை. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வாறான கட்டாகாலி நாய்கள் ஹட்டன்- டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே இவ்வாறு வீதிகளில் காணப்படும் நாய்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது அல்லது அவற்றை விச ஊற்றி ஏற்றி கொல்லும் நடவடிக்கை உள்ளூராட்சி நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போது அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், பாடசாலையை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளமையானது மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மற்றும் கட்டக்காலி பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X