Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பசறை கனவரல்லைப் பெருந்தோட்ட ஈ. ஜி. கே பிரிவில் மின்சாரம் தாக்கி பலியான 25 வயதான தமிழரசன் கணேசமூர்த்திக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை, பதுளை உதவித் தொழில் ஆணையாளர் தலைமையில் அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை (17) மாலை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க மாநில இயக்குனர் எஸ். முத்துகுமார், இணைப்பாளர் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் தோட்டமட்டத் தலைவர்கள், மரணமடைந்த தமிழரசன் கணேசமூர்த்தி சார்பாகவும், தோட்ட கம்பனியான நமுனுகலை பிளான்டேசன் சார்பாக தோட்ட முகாமையாளரும், கலந்து கொண்டிருந்தனர்.
தோட்ட அதிகாரியின் வீட்டில் மின்சாரம் தாக்கி மரணமான தமிழரசன் கணேசமூர்த்திக்கு இழப்பீடாக 15 இலட்ச ரூபாய் பணத்தை வழங்க தீர்மானித்திருப்பதாக தோட்ட முகாமையாளர் கூறினார். ஆனாலும், இழப்பீட்டுத் தொகையினைப் பெற்றுக் கொள்வதற்கு, மரணமானவரின் குடும்பத்தினர் எவரும் சமூகமளித்திருக்கவில்லை.
அத்துடன், மரணமானவரின் குடும்பத்தினர் ஒருவருக்கு தோட்டக் கள உத்தியோகத்தர் பதவியை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
தோட்ட முகாமையாளரின் பொறுப்பில் இழப்பீட்டுத் தொகை இருப்பதால், மரணமானவரின் குடும்பத்தினர் அத்தொகையினைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அறிவிக்கப்பட்டது.
தொழிற்சங்க மாநில இயக்குனர் எஸ். முத்துக்குமார் கருத்துத் தெரிவிக்கையில், 'எம்மால் முடிந்ததை இழப்பீடாகப் பெற்றுக் கொடுக்கவுள்ளோம். இதனை விட கூடுதலாக இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுக்க எவரும் முன் வருவார்களேயானால், அதனை நாம் வரவேற்போம்.' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago