Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 நவம்பர் 14 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகிய மூவரும் நேற்றைய தினம் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, பொதுமக்களால் ஊ…ஊ சத்தமிட்டு துரத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்ற நிலையில், அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் இதனால் வாசுதேவ நாணயக்கார எம்.பி, திஸ்ஸ விதாரண எம்.பி ஆகியோர் நிகழ்வு மண்டபத்தை விட்டு வெளியேற முடியாத நிலையும் ஏற்பட்டது.
அங்கு இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அங்கிருந்து வெளியேறிய போதும் அவர்களுக்கும் அங்கிருந்த மக்கள் பலத்த ஊ சத்தமிட்டனர்.
எனினும் அங்கு குழுமியிருந்தவர்களை நோக்கி கையசைத்து, சிரித்தவாறே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வெளியேறி சென்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025