R.Maheshwary / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
கண்டியிலுள்ள பிரபல ஆண்கள் தனியார் பாடசாலைக்கு அருகில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த நிலையத்தின் முகாமையாளர், உரிமையாளர் மற்றும் அங்கு தொழில் செய்த யுவதிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட யுவதிகள் இருவரும் 30, 35 வயதானவர்கள் என்பதுடன், அவர்கள் அவிசாவளை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி- டி.எஸ். சேனாநாயக்க மாவத்தையிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து,அங்கு விபசார நிலையத்தை நடத்திச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
15 minute ago
33 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
5 hours ago