2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கண்டி விபத்தில் 8 வயதுச் சிறுவன் படுகாயம்

Freelancer   / 2023 ஜனவரி 28 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - பன்விலை நகரில் நேற்று மாலை இம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் 8 வயதுச் சிறுவன் ஒருவன் காயமடைந்து கண்டி அரசினர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மடுல்கலை பிரதேசத்திலிருந்து பன்விலை நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, வீதியை கடக்க முயற்சித்த சிறுவன் மீது மோதியதால் படுகாயமடைந்த சிறுவன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வித்து சம்பந்தமான விசாரணைகளை பன்விலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் வீதியில் பஸ் வண்டிகள் நிறுத்தப்படுவதாலேயே இவ்வாறான விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக போது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இது போன்ற மற்றுமொரு விபத்து அண்மையில் இப்பகுதியில் இடம்பெற்றதாக  பொது மக்கள் தெரிவிப்பதுடன், பாதசாரிகள் கடவை ஒன்று விபத்து நடந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

குறித்த விபத்து நடந்த இடத்திலேயே தமிழ் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் வீதியைக் கடந்து பாடசாலைக்குச் செல்வதும் குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .