2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கம்பளையில் இன்று மே தினப் போராட்டம்

Freelancer   / 2022 மே 01 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். யோகா

கம்பளை நகரில் இன்று  மே தின போராட்டம் நடைப்பெற்றது. கம்பளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பித்த இந்த போராட்டம்  கம்பளை நகரை சுற்றி வந்து போராட்டம் நடத்தினர்.

கம்பளை - அம்புகமுவ வீதி, மலபார், வீதி, கண்டி பிரதான வீதி, கடுகண்ணாவ வீதி, நூவரெலியா வீதி, ஆகிய பிரதான வீதியில் சென்று இந்த போராட்டம் நடந்தது.

கம்பளை நகரில்  உள்ள வியாபார நிலையங்களும் மூடி இதற்கு ஆதரவு வழங்கினர் .

கம்பளை வியாபார நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள்  இளைஞர்கள் பல்வேறு தொழில் செய்யும் மக்களும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை நடத்தினர்.

அனைவரும், கறுப்பு பட்டியை தலையில் கட்டி கறுப்பு கொடிகளை கையில் வைத்துக் கொண்டு  கறுப்பு ஆடை அணிந்து இந்த போராட்டம் நடந்தது.

பதாதைகளை ஏந்தி இந்த கோஷங்களை எழுப்பி இந்த போராட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தில் சுமார்  2,500 க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் மே தின போராட்டமாக நடந்தது. தொழிலாளர் தினமான இன்று போராட்டம் நடத்தப்பட்டது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X