R.Maheshwary / 2022 மே 31 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
ஹட்டன் நகரில் கறுப்பு எரிவாயு சந்தை மற்றும் வரிசை முறையைத் தவிர்க்கவே சமையல் எரிவாயு விநியோகத்துக்கான பதிவு செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது என அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தாரா கமகே தெரிவித்தார்.
இந்த புதிய பதிவு நடைமுறையை, நேற்று (30) ஹட்டன் -டன்பார் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
முறையாக ஒவ்வொரு குடும்பத்தினரும் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள கூடியவாறு முன்கூட்டியே பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைய அடுத்த மாதத்திற்கு தேவையான எரிவாயுவை பாவனையாளர் ஒருவர் பதிவு செய்து கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
அவருடைய பதிவினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் ஏப்ரல் மாத மின்சார பட்டியலினை எடுத்து வர வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு தொலைபேசி ஊடாகவோ, குறுஞ் செய்தி ஊடாகவோ அறிவிக்கப்படும் அதனை தொடர்ந்து, அவர் எரிவாயு வரிசையில் நிற்காது தங்களது குடும்பத்திற்கு தேவையான எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
இதன் மூலம் அனைவருக்கும் எரிவாயு பெற்றுக்கொள்ள கூடிய நிலைமை உருவாவதுடன் மேலதிகமாக எரிவாயுக்களை சேமித்து வைத்துக்கொள்ளும் நிலையும் மாறும் என்றார்.
இதே நேரம் நேற்று பதிவு செய்து கொள்ள முடியாதவர்கள் இன்றைய தினமும் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முடியாதவர்கள் நாளை (1) முதல் நோர்வூட் பிரதேச உப செயலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago