Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 30 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, நுவரெலியா மாவட்டங்ளைச் சேர்ந்த பின்தங்கிய பாடசாலைகளில் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்ளை இலவசமாக வழங்கும் திட்டம் ஒன்றை ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் நலன்புரி சங்கம் நடை முறைப்படுத்தவுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் இது முதற்கட்டமாக நடை முறைப் படுத்தப்படுவதுடன் வருடா வருடம் இத்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளரும் மேற்படி நலன்புரி அமைப்பின் தலைவருமான கலாநிதி ஜனக லிந்தர தெரிவித்தார்.
பேராதனையிலுள்ள மேற்படி திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
'அக்குறட சவிய' (எழுத்திற்கு சக்தி) என்றழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்ளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் பயிற்சிப் புத்தகங்கள், எழுது கருவிகள், மற்றும் பாதணிகள் போன்ற பாடசாலைக் கல்விக்கு தேவையான பல பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்ளைச் சேர்ந்த பின்தங்கிய பிரதேசப் பாடசலைகளைச் சேர்ந்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து இதற்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி திட்டத்திற்கு நலன் விரும்பிகளிடமிருந்து நன் கொடைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும், விரும்பியவர்கள் 071 7178788 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அன்பளிப்புகளை வழங்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
6 hours ago
7 hours ago