Editorial / 2024 ஜூன் 17 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கலதுர தோட்டத்தில், தொழில் புரியும் பெண் தொழிலாளியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான அந்த பெண் தொழிலாளி, வேலைக்கு சமூகமளிக்காமையால் குறித்த தோட்டத்தின் காவலாளியாக கடமை புரியும் பெரும்பான்மையினத்தவர் தொலைபேசி மூலமாக குறித்த தோட்டத் தொழிலாளியின் கணவனை திட்டியுள்ளார்.
அத்துடன், அவரது தோட்ட குடியிருப்பு அமைந்துள்ள கோட்டப்பந்தா பிரதேசத்திற்கு குடிபோதையில் ஆயுதங்கள் சகிதம் இன்னும் சில பெரும்பான்மையின சென்று, குறித்த குடும்பத்தினரை தாக்கியது மட்டுமல்லாது, அந்த இடத்திலிருந்து அவரை இழுத்துச் சென்று தோட்டக் குடியிருப்புக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் வைத்து தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான வீராசாமி ஜெகதீஸ்வரன் (வயது 44) தற்போது இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும், இதுவரை இவ் அசம்பாவிதத்திற்கு காரணமான பெரும்பான்மை இனத்தவர்கள் ஐவரில் ஒருவரையேனும் கிரியல்ல பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்விடயம் தொடர்பாக தோட்ட இளைஞர்கள் தொலைபேசி மூலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்ததற்கமைய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் சம்பவ இடத்திற்கு நேரடியாக விரைந்தார்.
தாக்குதலுக்குள்ளான குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உடனடியாக குறித்த இடத்திற்கு வருமாறு கிரியல்ல பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்திய அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் தொலைபேசி வாயிலாக தொடர்பினை ஏற்படுத்தி குறித்த சம்பவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
7 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
06 Nov 2025