R.Maheshwary / 2022 மார்ச் 08 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
வரட்சியான காலநிலையால் மாத்தளை- களுதாவளை மேற் பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமக்கான குடிநீர் விநியோகத்துக்காக பிரதேசத்தில் நீர்குழாய் ஒன்று பொருத்தப்பட்டிருந்தாலும் அதன்மூலம் போதியளவு நீரைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என குற்றஞ்சுமத்துகின்றனர்.
இந்த விடயத்துக்காக அண்மையில் களுதாவளை பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பிரதேசவாசிகள், தற்போது குடிநீருக்காக பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியிருப்பதாகவும் அவ்வாறு இல்லையெனில் சொந்தமாக அதிகம் பணம் செலுத்தி பவுசர் மூலம் நீரைப் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026