2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கஹவத்தை OIC யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம்

Editorial   / 2025 ஜூலை 03 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹாவத்தை அன்தான பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கஹாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) தலைமை பொலிஸ் பரிசோதகர் சுமித் கருணாரத்ன, யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வந்த ஒரு சிறப்பு பொலிஸ் குழு உட்பட ஐந்து பொலிஸ் குழுக்கள் இந்தக் கொலையை விசாரிக்க நிறுத்தப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கஹாவத்தை அன்தான கொஸ்கெல்ல பகுதியில், கஹவத்தையின் புங்கிரியா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  கடந்த 30 ஆம் திகதி இரவு, சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையை பொலிஸ் அதிகாரிகள் போல் வேடமிட்ட ஒரு குழு நடத்தியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இமந்த சுரஞ்சன் என்ற 22 வயது இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார். ஒரு இளைஞர் காயமடைந்தார்,  சகோதர்களான இருவரையும் வீட்டிலிருந்து கடத்திச் சென்றே அக்குழு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளது,

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .