Freelancer / 2023 ஜூலை 19 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
மஹியங்கனை தெய்கொல்ல பகுதியில் புதன்கிழமை(19) வீடொன்றை காட்டு யானை தாக்கி ஒருபெண் படுகாயமடைந்துள்ளார். இன்னொரு பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் 68 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மரணித்த பெண்ணின் பேத்தியான 23 வயதான யுவதி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago
3 hours ago