R.Maheshwary / 2022 மே 12 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார
மஸ்கெலியா- காட்மோர் தோட்டத்தின் போக்மோர் பிரிவில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு மேலே உள்ள மண்மேடு ஒன்று (11) சரிந்து விழுந்ததால், குறித்த தோட்டத்தில் வசிக்கும் 42 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையால் இங்கு மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு அந்த இடத்தில் ஏற்பட்ட மண்சரிவின் பின்னர், தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் நுவரெலியா அலுவலக அதிகாரிகள் அங்கு பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது அந்தப் பகுதி மண்சரிவு அபாயம் உள்ளதால் அங்கிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
எனினும் இதுவரை இம்மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக்கொடுக்க எவரும் முன்வரவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago