2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

R.Maheshwary   / 2022 மே 30 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கடந்த 3 நாள்களாக காணாமல் போயிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர், மஹாவலி கங்கையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி- கோணவல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 27ஆம் திகதி, நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயைப் பார்க்கச் செல்வதாகத் தெரிவித்து, குறித்த பெண் சென்றதாகவும் பின்னர் மாலையாகியும் வீடு திரும்பாத நிலையில், வீட்டார் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், நாவலப்பிட்டி- கித்துல்கொட பிரதேசத்திலுள்ள மஹாவலி ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸாருடன் காணாமல் போன பெண்ணின் உறவினர்களும் அங்கு சென்றுள்ளனர்.

இதன்போது, அப்பெண்ணின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணிண் மூத்த மகள் இம்முறை சாதாரணதர பரீட்சையில் தோற்றி வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X