2025 மே 05, திங்கட்கிழமை

காதலனால் துஷ்பிரயோகம்; மாணவி தற்கொலை

Freelancer   / 2023 டிசெம்பர் 07 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11ம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தந்தை பிரிந்த நிலையில், தாயும் வெளிநாடு சென்றுள்ளார். குறித்த மாணவி  70 வயதுடைய தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் மாணவியின் 20 வயதுடைய காதலன் முச்சக்கரவண்டியில் வந்து மாணவியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

தான் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு மாணவி வீட்டை விட்டு வெளியேறினாள்.

வீட்டிற்கு வந்த இந்த மாணவி தனது பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்டதால் கடும் நோய்வாய்ப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், தான் தனது காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த மாத்திரைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்த பதுளை பொலிஸார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X