2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’காப்புறுதித் திட்டத்தின்மூலம் மாணவர்களுக்கு சலுகைகள்’

Kogilavani   / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

“பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டமானது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இத்திட்டத்தினூடாக, மாணவர்கள் சலுகைகளை பெறுவர்” என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் கைத்தொழிலை ஊக்குவிப்பது குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

“அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள காப்புறுத்தித் திட்டத்தின் மூலம், பாடசாலை மாணவர்கள் கூடுதலான சலுகைகளை இலவசமாக பெற்றுக்கொள்வர். காப்புறுதித் திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக, இவ்வாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் 2,700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“மாணவர்களுக்கு ஏதேனும் நோய் மற்றும் ஆபத்துகள் ஏற்படும் பட்சத்தில், இத்திட்டத்தின் மூலம் இலவசமாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .