2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காயமடைந்த இருவர் தப்பியோட்டம்

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன் 

முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் கூரை மீது விழுந்ததில் காயமடைந்த இருவர் தப்பி ஓடிய சம்பவம், காமினிபுர பிரதேசத்தில், நேற்று  (25) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் நகரத்தில் இருந்து ஹட்டன் - காமினிபுர பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று, காமினிபுர பிரதேச பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதுண்டு, சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து குடியிருப்பின் மீது வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்தவரும் தப்பி ஓடியுள்ளனர். அதன்பின்னர் ஹட்டன் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு, இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .