Editorial / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாத மலை யாத்திரிகர்களுக்கு, காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில், ஆறு வியாபாரிகளைக் கைதுசெய்துள்ள நுவரெலியா மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பாவனைக்கு உதவாத 96 குளிர்பானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.
யாத்திரிகர்களுக்குச் சுகாதாரமான உணவுகளை விநியோகிக்க வேண்டுமெனும் நோக்கில், வியாபார நிலையங்களில் திடீர் சோதனைகளை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைவாக, நல்லதண்ணி மற்றும் நல்லதண்ணியிலிருந்து சிவனொளிபாத மலை வரையான பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில், சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே, மேற்படி அறுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி வியாபாரிகளுக்கு எதிராக ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
24 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
48 minute ago