2026 ஜனவரி 17, சனிக்கிழமை

கால்களற்ற சிறுத்தையின் உடலம் மீட்பு

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை தோட்டத்தின் தேயிலை மலையொன்றிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (1) காலை மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து பற்கள், தோல், நான்கு கால்கள் என்பனவும் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

மிருக வேட்டையில் ஈடுபடும் சிலர்  தேயிலைத் தோட்டங்களில் பொறிகளை வைப்பதாகவும் இதில் சிறுத்தைகளும் சிக்கி உயிரிழப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனத் தெரிவித்துள்ள பொகவந்தலாவை பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X