Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 13 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, கந்தகெட்டிய பகுதியில் காளான் உட்கொண்ட மூவர், நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கைக்குழந்தை மற்றும் பெண்ணொருவர் உள்ளடங்குவதாக, கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி மூவரும், பகலுணவுக்கு காளான் கறியை சமைத்து உண்டுள்ளனர். உணவு உட்கொண்ட சிறிது நேரத்தில், தலைச்சுற்று, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மேற்படி மூவரும் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உட்கொண்ட காளானே விஷமாகியுள்ளதாக, வைத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago