2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

காஸ் போகும்வரை காத்திருக்கும் அமரர் ஊர்தி

Editorial   / 2024 ஜூலை 31 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா-உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியின் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா பொரலந்தை சிறிய நகரத்தில் அமைந்துள்ள லாப்கேஸ் நிறுவனத்திற்கு சமையல் எரிவாயு நிரப்பிய சிலிண்டர்களை ஏற்றி வந்த 40 அடி நீளம் கொண்ட பார ஊர்தி இயந்திர கோளாறு காரணமாக நடுவீதியில் நின்றமையால் இந்த போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை (31) மாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்  காரணமாக பொரலந்தை சிறிய நகர பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நுவரெலியா தொடக்கம் கந்தப்பளை,இராகலை ,வலப்பனை, உடப்புசல்லாவ நோக்கி பயணிக்கும், வாகனங்களும் ,உடபுஸ்ஸல்லாவ தொடக்கம் நுவரெலியா நோக்கி பயணிக்கும் வாகனங்களும் பொரலந்தை பகுதியில் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.     

இந்த வாகன கோளாறு காரணமாக நுவரெலியா- உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் சுமார் இரு திசைகளிலும் சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு அதிகமான தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த பாரிய வாகன போக்குவரத்து தடை காரணமாக கந்தப்பளை பகுதியிலிருந்து ஆவா எளிய பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பூதவுடல் ஏந்திய மலர்ச்சாலை ஊர்தி வாகனம் பொரலந்தை நகரத்தைக் கடந்து செல்ல முடியாது நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் வலப்பனை நீதிமன்றத்திலிருந்து நுவரெலியா சிறைச்சாலைக்கு கைதிகளுடன் வருகை தந்த சிறைச்சாலை வாகனமும் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இப் பிரதான வீதி ஊடாக உடபுஸ்ஸல்லாவ, வலப்பனை,இராகலை,கந்தப்பளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு புதன்கிழமை (31) மாலை வருகை தந்தவர்களும் வாகன போக்குவரத்து தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X