R.Maheshwary / 2022 ஜனவரி 19 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நிறைமாத கர்ப்பிணியொருவர், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமானது, இராகலை- சமஹிபுர பகுதியில் நேற்று முன்தினம் (17) மாலை பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தாயான, 34 வயதான காரியவசம் சாந்தினி பிரியதர்சிகா என்பவரே உயிரிழந்துள்ளார் என இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
அடுத்த வாரமளவில் இரண்டாவது பிரசவத்துக்கு தயாராக இருந்த அவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்று ஆடைகளை கழுவுவதற்காக, தண்ணீர் எடுக்க முற்பட்ட போது வழுக்கி கினற்றுக்குள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிணற்றுக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என, வீட்டார் தேடிய போதே, அப்பெண் கிணற்றுக்குள் விழுந்து கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .