R.Maheshwary / 2022 மார்ச் 09 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான பிரவுன்வீக் தோட்டத்தில் உள்ள 250 குடும்பங்கள் குடிநீரின்றி பெரும் அவதிப்படுகின்றனர்.
குறித்த தோட்ட மக்களுக்கு தேவையான குடிநீ,ர் நீரோடையிலிருந்து தோட்ட நிர்வாகம் பெற்று நீர் பம்பி ஊடாகவே மக்களுக்கு வழங்கபட்டு வருகின்றது.
எனினும் தற்போது மலையக பகுதியில் நிலவி வரும் வரட்சியான காலநிலையினையடுத்து, நீரூற்றுக்கள் வற்றிப்போய் உள்ளன.இதனால் பெரும்பாலானவர்கள் குடிநீருக்காக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அத்துடன் மழையுடனான காலநிலை நிலவுகின்ற நாள்களிலும் குடிநீரை விநியோகிக்கும் தண்ணீர் பம்பி அடிக்கடி பழுதடைந்து விடுவதாகவும் இதனால், கடந்த கடந்த 30 வருட காலமாக குடீநீர் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தண்ணீர் பம்பி பழுதடையும் போது தோட்ட நிர்வாகத்தினால் தண்ணீர் பவுசர் மூலம் வழங்கப்பட்டாலும் அது தமது தேவைக்கு போதுமானதாக இல்லை என்கின்றனர்.
எனவே தமது குடிநீர் பிரச்சினைக்கு சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு, தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026