2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தரைக் காணவில்லை

Gavitha   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை குருபெவில பல்லேவெலப் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தரை, ஒரு வாரமாகக் காணவில்லை என்று, பின்னவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த மங்கள தேசப்பிரிய என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் 1ஆம் திகதி விகாரைக்குச் சென்றுள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

முறைப்பாட்டுக்கு அமைவாக, பொதுமக்களுடன் உதவியுடன் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் பின்னவலப் பொலிஸார் தெரிவிப்பட்டு வருகின்றனர்.

இவர் பயணித்த மோட்டார் சைக்கிள், சாவி என்பன கைவிடப்பட்ட நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X