Freelancer / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ், ஷங்கீதன்
இலங்கையின் குட்டி லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனி பொழிவு அதிகமாக காணப்படுகின்றன.
இந்த பனி பொழிவு காரணமாக புற்தரைகளும் தேயிலை செடிகளும் உருளைக் கிழங்கு உள்ளிட்ட மரக்கறி செடிகளும் அதிகளவில் கருகி பாதிப்படைந்தன.
அதே வேளை கடும் குளிரும் நிலவியது. அதிகாலையில் குளிர் அதிகமாக காணப்பட்டதால் தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தமையை காணமுடிந்தது.
நுவரெலியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இரவில் குளிராகவும் பகலில் வெப்பம் அதிகமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .