2025 மே 05, திங்கட்கிழமை

குருவிட்ட சிறைச்சாலையில் 15 பேருக்கு கொரோனா தொற்று

Gavitha   / 2020 நவம்பர் 15 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

குருவிட்ட சிறைச்சாலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 15 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சிறைச்சாலை சனிக்கிழமை (14) முதல் மூடப்பட்டுள்ளது.

இவர்களில் பல சந்தேகநபர்கள், சில வாரங்களுக்கு முன்னர், கொழும்பிலிருந்து குருவிட்ட சிறைச்சாலைக்கு பெண்கள் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1 வாரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, அச்சந்தேக நபர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, சந்தேக நபர்கள் 13 பேருக்கும் காவலர்களில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது. இவர்கள், பொலன்னறுவை கல்லெல்லாவிலுள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை மய்யத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறைச்சாலையிலுள்ள அனைத்து காவலர்களும் சந்தேகநபர்கள் குற்றவாளிகள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், இச்சிறைச்சாலைக்குள் நுழைவதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்து என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X