Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
“எந்தக் குற்றங்களிலும் ஈடுபடாதவர்களுக்கே, ஐக்கிய தேசியக் கட்சி முன்னுரிமை அளிக்கும் என்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருர் கே.கே.பியதாஸ தெரிவித்தார்.
“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பிப்போர், குற்றச் செயல்களில் ஈடுப்படாதவர்களாக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்த, பொலிஸ் சான்றிதழ் பெறப்பட வேண்டும். குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்படும் பட்சத்திலேயே, தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் வங்கப்படும்” என்றும், அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 1972ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி, தனது அரசியல் வாழ்கைக்கு காலடி எடுத்து வைத்தார். அவர், இன்றுவரை நாற்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் அமைச்சராக, எதிர்க் கட்சித் தலைவராக மற்றும் பிரதமராக சேவை செய்து வருகிறார்.
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில், மலையகம் பாரிய அபிவிருத்திக் கண்டுள்ளது. அந்தவகையில், தோட்டப்பகுதி கல்வி முன்னேற்றமடைந்துள்ளது, மலையகப் பாடசாலைகள் அபிவிருத்திச் செய்யப்பட்டுள்ளன. மலையகக் கல்வி கலாசாலைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. இது போன்று பாரிய அபிவிருத்திப் பணிகளை மலையகத்தில் முன்னெடுத்தாலும், நல்லாட்சி அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்றே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள், ஹம்பகமுவ பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் அழகுப்படுத்தப்படும். இதற்கு எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஹட்டன் நகரசபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபை ஆகியவற்றை ஐ.தே.கட்சி கைப்பற்றுவதுடன் தனது திட்டங்களையும் நிறைவேற்றும்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐ.தே.க சார்பில் போட்டியிடுவதற்கு, கஞ்சாக்காரர்கள், திருடர்கள், மாணிக்ககல் வியாபாரிகள், சமூக விரோதிகளுக்கு இடம்கிடையாது. நல்லவர்களுக்கு மாத்திரமே இடமுண்டு. இதற்கு குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்க, பொலிஸ் சான்றிதழ் பெறப்பட வேண்டும். அதேபோன்று, தேர்தலில் போட்டியிடுவதற்கான 25 சதவீத வாய்ப்பு, பெண்களுக்கும் வழங்கப்படும்” என்றார்.
51 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago
1 hours ago