2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி முதியவர் மரணம்

R.Maheshwary   / 2022 மார்ச் 10 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேயிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள    சென்கூம்ஸ்  தோட்டத்தில், நேற்று (9)   மாலை 5.45 மணியளவில் குளவிக் கொட்டுக்கு  இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய இவர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு இறந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான அறுபத்தி ஏழு வயதுடைய அந்தோனி ஜோசப் என தெரியவந்துள்ளது.

அந்தோனி ஜோசப்பின் மனைவியும் பேரப்பிள்ளையும்   வீட்டுக்கு  விறகு  கொண்டு வருவதற்காக சென்றுள்ளதுடன், இருவரும் குறித்த நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தினால் உயிரிழந்தவர் அவர்களைத் தேடி சென்றுள்ளார்.

 இதன்போது, அப்பகுதியில் உள்ள தேயிலைச் செடியின் அடியில்  கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து, இவரைக் கொட்டிய நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X