2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகி சிறுமி மரணம்

R.Maheshwary   / 2022 மார்ச் 23 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மந்திரிதென்ன கிராமத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து வயது சிறுமியொருவர், நேற்று (22) இரவு உயிரிழந்துள்ளார்.

கடந்த  திங்கட்கிழமை மதியம்  தனது தாயுடன் அவர்களது விவசாய நிலத்துக்கச் சென்ற போது, குளவி கலைந்து இருவரையும் கொட்டியுள்ளது.

இதனையடுத்து, இவர்களை உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு

சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) இரவு சிகிச்சை பலனின்றி ஐந்து வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் தாய் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X