2025 மே 06, செவ்வாய்க்கிழமை

“குழந்தை பெறுவதற்கும் வரி”

Freelancer   / 2023 நவம்பர் 15 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  மலையக மக்களுக்கு  கானல் நீராக முன்வைக்கப்பட்டுள்ள  ஒரு சில முன்மொழிவுகளை முடிந்தால் செயற்படுத்திக் காட்டுங்கள்  பார்க்கலாம்  என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு சவால் விடுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி  மாவட்ட  எம்.பி.யான   எம்.வேலுகுமார்  எதிர்காலத்தில்  திருமணம் செய்வதற்கும், குழந்தை  பெறுவதற்கும் வரி செலுத்த நேரிடும் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  முதல் நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு  சவால் விடுத்த அவர்  மேலும் பேசுகையில்,

 நிகழ்காலம் அழிந்துக்கொண்டிருக்கின்ற நிலையில்  இறந்த காலத்தை இலக்காக கொண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.கற்பனை உலகத்தை அடிப்படையாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.  
 
நாட்டு மக்களுக்கான  புரட்சிகரமான வரவு செலவுத் திட்டம் என்று  இந்த வரவு செலவுத்திட்டம்  குறிப்பிடப்படுகிறது.ஆனால் வற் வரி உட்பட வரி விதிப்பு தொடர்பில் எவ்வித முன்மொழிவுகளும்  முன்வைக்கப்படவில்லை.நாட்டு மக்களுக்கு எதனையும் அறிவிக்காமல் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வரி விதிப்பை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கப்படுகிறது.வரி விதிப்பை தவிர்த்து எவ்வித மாற்றுத்திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது. இந்நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில்  திருமணம்  செய்வதற்கும், குழந்தை  பெறுவதற்கும்  வரி  செலுத்த நேரிடும்

பெருந்தோட்ட பகுதிகளில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்  முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டு இன்றும் இழுபறி நிலையில் உள்ள விடயங்களே இம்முறையும் குறிப்பிடப்பட்டுள்ளன.1000 ரூபா சம்பள விவகாரத்துக்கு அப்பாற்பட்டு எவ்வித விடயங்களும் பேசப்படவில்லை.

 .மலைய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் எவ்வித யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை.காலம் காலமாக குறிப்பிடப்படும் காணி உரிமை என்ற ஒரு வரி மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதிகள் தெளிவுடன் உள்ளார்களா ,இல்லையா என்பது கேள்விக்கிடமாகவுள்ளது.மலையக மக்கள்  தொடர்பில் கானல் நீராக குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவை முடிந்தால் செயற்படுத்துங்கள் பார்க்கலாம் என  அரசிலுள்ள மலையக பிரதிநிதிகளுக்கு சவால் விடுக்கின்றேன்  என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X