2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

கேகாலையில் விழுந்த கல்முனை மாணவன் மீட்பு

Editorial   / 2024 மார்ச் 10 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை அலகல்ல மலையில் முகாமிட்டு திரும்பும் போது குன்றின் மீதிருந்து விழுந்த வடமேற்கு பல்கலைக்கழக மாணவனை,  சுமார் இரண்டரை கிலோமீற்றர் மலை உச்சியில் ஏறி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான கல்முனையைச் சேர்ந்த ஒரிங்டன் அன்ட்ராடோ என்ற மாணவனே  இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

அதே பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் கேகாலை அலகல்ல மலையில் ஒன்றாக முகாமிட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (10) காலை மீண்டும் மலையிலிருந்து இறங்கும் போது மாணவர் ஒருவர் 10 அடி உயரத்தில் ஒரு பாறையில்   இருந்து கீழே விழுந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X