2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கேஸ் கிடைக்காததால் அமைதியின்மை

Freelancer   / 2022 மார்ச் 12 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மலையகத்தில் பிரதான நகரங்களில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 7 நாட்களுக்கு பிறகு இன்று லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொது மக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே காத்திருந்து எரிவாயுவை பெற்றுச் சென்றனர். 

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.

எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட 100ற்கும் குறைவான சிலிண்டர்களே கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை பலருக்கு வழங்க முடியாது போனதாக   விற்பனையாளர் கூறினார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X