2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கேஸ் வரும் வரை உணவுக்காக காத்திருக்கவும்

R.Maheshwary   / 2022 மார்ச் 10 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கண்டி நகரிலுள்ள பிரதான ஹோட்டல் ஒன்றுக்கு இரவு உணவு வாங்கச் சென்ற இருவர், உணவுக்காக இரண்டு மணித்தியாலங்கள் காத்திருக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

சமையல் எரிவாயு பிரச்சினை காரணமாக கண்டி நகரிலுள்ள பல உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தலதா வீதியிலுள்ள பிரதான ஹோட்டல் ஒன்றுக்கு வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்த இருவர், தமது நண்பர்களுடன்  இரவு உணவுக்காக குறித்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர்.

உணவை ஓர்டர் செய்து அரை மணித்தியாலயம் காத்திருந்துள்ளனர். பின்னர் ஹோட்டல் பணியாளர் ஒருவர், அவசரமாக ஓடி வந்து, “மன்னிக்கவும் சேர் ஹோட்டலில் சமையல் எரிவாயு இல்லை” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் “சமையல் எரிவாயு மாவனெல்ல பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் எனவே, அங்கு சென்று வாங்கி வந்த பின்னரே சமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளதுடன் 2 மணித்தியாலங்கள் காத்திருந்தால் நீங்கள் ஓர்டர் செய்த உணவைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இருவரும் அங்கிருந்து வெளியேறி, வேறு ஒரு ஹோட்டலுக்குச் சென்று, உணவு உண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X