2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொஞ்சம் வந்து பார்த்து விடுங்கள்

Freelancer   / 2022 நவம்பர் 21 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
 
வலப்பனை பிரதேச சபையைச் சேர்ந்தவர்கள், இராகலை நகருக்கு வந்து, நகரை பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர். 
 
பஸ்நிலையத்தை அண்மித்த பகுதி, குண்டும் குழியுமாக இருக்கின்றது. அவற்றை செப்பனிடுமாறும் ​மக்கள் கோரியுள்ளனர்.

வலப்பனை பிரதேச சபைக்கு சொந்தமான வாராந்த சந்தை கட்டடம், கலாசார மண்டபம் இராகலை நகரில்அமைந்துள்ள பகுதியை அண்மித்தே பஸ்நிலையம் உள்ளது. 
 
குப்பைகளும், ஏனைய கழிவுப் பொருட்களும் அவற்றை அண்மித்த பகுதியிலேயே கொட்டப்படுகின்றன. ஆகையால், நகருக்குள் செல்லமுடியாத வகையில் துர்நாற்றம் வீசுகின்றது. 
 
இப்பகுதி ஊடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், ஸ்டாபோர்ட் தோட்ட மக்கள்,   சந்திரமாதா தேவாலயத்துக்குச் செல்வோர் மற்றும் பஸ் பயணிகள் அசௌகரிகங்களுக்கு முகக்கொடுத்து வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .