R.Maheshwary / 2022 மே 25 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொட்டகலையில் எரிவாயு சிலிண்டர்களை கூப்பன் முறை மூலம் தடையின்றி வழங்குவதற்கு கொட்டகலை வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய, கொட்டக்கலையில் ஐந்து கிராமசேவகர் பிரிவிலும் வருகின்ற ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒவ்வொறு குடும்பத்திற்கும் கிராமசேவகர் உறுதிபடுத்தப்பட்ட முத்திரையோடு கூப்பனொன்று வழங்கப்படும்.
இக்கூப்பனினை எரிவாயு விற்பனை முகவரிடம் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கான அம்மாதத்திற்கான எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் கையளிக்கப்படும். இம்முறை மூலம் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. அனைத்து குடும்பத்திற்கும் மாதம் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருக்குமென கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டிருந்தார்.
இக்கலந்துரையாடலில் திம்புளை பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ஸ்ரீ உட்பட கொட்டகலை வர்த்தக சங்க உறுப்பினர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.
மேலும் கொட்டகலைக்கு அப்பால் மற்றும் வெளியிடங்களை சார்ந்தவர்கள் கொட்டகலையில் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியாது என இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago