2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

கொட்டகலை நகரம் முழுவதும் சிசிடிவி

Janu   / 2023 ஒக்டோபர் 08 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் மாதாந்த கூட்டத்தொடர் சனிக்கிழமை (07) கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் தீபாவளியை இலக்கு வைத்து கொட்டக்கலை நகரின் பாதுகாப்பினை உறுதி செய்ய தீர்மானித்துள்ள ஐக்கிய வர்த்தக சங்கம்,  நகருக்கு வரும் பொது மக்களின் நன்மை கருதி பல்வேறு தீர்மானங்களை குறிப்பிட்ட கலந்துரையாடல் மூலம் எடுத்துள்ளது.

குறிப்பாக கொட்டகலை நகரில் சமீப காலமாக  வர்த்தக நிலையங்கள்,வீடுகள் என பல இடங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் அவற்றை  தடுக்கும் முகமாக நகர வர்த்தகர்களின் பங்களிப்பில் நகரம் முழுவதும் 32 சிசிடிவி கேமாராக்களை பொருத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு பொறுத்தப்படும் பாதுகாப்பு கெமராக்களை  24 மணித்தியாலமும்  கண்காணிக்க திம்புள பத்தனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கவும் தீர்மானம் எடுத்துள்ளனர்.

இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தை திம்புளை பத்தனை பொலிஸார்  ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தவிர குறிப்பிட்ட கலந்துரையாடலில் கொட்டக்கலை நகருக்கு வருகை தரும் நுகர்வோர்களுக்கு தேவையான பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், போயா தினங்களுக்கு  அனைத்து கடைகளையும் மூடவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் நகரில் பாதுகாப்பற்ற மரங்களை அகற்றவும் மேலதிக வகுப்புக்கு செல்லும் மாணவர்களை கண்காணித்து அவர்களின் கல்வி தரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆ.ரமேஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X