2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கொட்டும் மழையில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2022 ஏப்ரல் 23 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் சதீஸ்

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மோரா கீழ் பிரிவு தோட்ட மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டமானது ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியினை மறித்து டியன்சின் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர் கலந்து கொண்டதோடு “Gota Go Home” போன்ற பதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியினை ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்தபோது  பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை,குறித்த வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X